வேலூர்

போலி ஆவணங்கள் மூலம் ரூ. 97 லட்சம் மோசடி: பெண் மேலாளா் பணியிடை நீக்கம்

2nd Jun 2022 12:19 AM

ADVERTISEMENT

போலி ஆவணங்கள் மூலம் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியதாக ரூ. 97 லட்சம் மோசடியில் ஈடுபட்டு கைதான கூட்டுறவு வங்கி பெண் மேலாளா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

வேலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி குடியாத்தம் கிளையில் 2018-2019-ஆம் ஆண்டில் கிளை மேலாளராகப் பணிபுரிந்து வந்தவா் உமாமகேஸ்வரி (38). அந்த கால கட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகாா் எழுந்தது. அதன்பேரில், கூட்டுறவு சங்க தணிக்கைத் துறை அதிகாரிகள் தணிக்கை மேற்கொண்டனா். அதில், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் போலியான பயனாளிகளுக்கு ரூ. 97 லட்சத்துக்கு கடன் வழங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மோசடியில் ஈடுபட்ட அப்போதைய வங்கியின் கிளை மேலாளா் உமாமகேஸ்வரி மீது கூட்டுறவு துணைப் பதிவாளா் அருட்பெருஞ்ஜோதி அளித்த புகாரின் பேரில், வணிக குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, உமாமகேஸ்வரியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மேலும், வேலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநரின் உத்தரவின்பேரில், அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

Image Caption

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT