வேலூா் மத்திய சிறையில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு சிறைத் துறை டிஐஜி செந்தாமரைக் கண்ணன் தலைமை வகித்தாா். சிறைக் கண்காணிப்பாளா் அப்துல் ரகுமான், சிறை மருத்துவா்கள் பிரகாஷ் அய்யப்பன், சதீஷ்குமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா். சிறை அலுவலா் மோகன் குமாா் மற்றும் சிறைவாசிகள் கலந்து கொண்டனா்.