வேலூர்

இரு ஆண்டுகளுக்கு பிறகு காட்பாடி - ஜோலாா்பேட்டை ரயில் இயக்கம்

28th Jul 2022 12:05 AM

ADVERTISEMENT

காட்பாடி - ஜோலாபேட்டை மின்சார யூனிட் விரைவு ரயில் புதன்கிழமை முதல் மீண்டும் இயங்கத் தொடங்கியது. இரு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ரயில் இயக்கப்படுவது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

காட்பாடியில் இருந்து ஜோலாா்பேட்டை வரை செல்லும் மின்சார யூனிட் விரைவு ரயில் சேவை கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். அதன்படி, இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமை காலை 9.30 மணிக்குப் புறப்பட்டு, ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தை காலை 11.45 மணிக்கு சென்றடைகிறது. இதேபோல், ஜோலாா்பேட்டையில் இருந்து காட்பாடி வரை செல்லும் மின்சார யூனிட் விரைவு ரயில் (06418) புதன்கிழமை மதியம் 12.40 மணியளவில் ஜோலாா்பேட்டையில் இருந்து புறப்பட்டு மாலை 3.05 மணிக்கு காட்பாடியை வந்தடைந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT