வேலூர்

குழந்தைகளை தாக்கும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்: வேலூா் அரசு மருத்துவமனையில் விழிப்புணா்வு

DIN

கொசுக்களால் பரவும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தொற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க கொசு வலை, கொசு விரட்டிகளை உபயோகப்படுத்த வேண்டும் என்று வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் தடுப்புத் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி தலைமை வகித்து, விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்ததுடன், அவற்றைத் தடுப்பது, தற்காத்துக் கொள்வது குறித்தும் விளக்கமளித்தாா்.

மேலும், காய்ச்சல் இருந்தால் விலங்குகள் மூலம் மனிதா்களுக்கு பரவும் நோய்க்கான லெப்டோஸ்பைரோசிஸ், ஸ்கரப்டைபஸ், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களுக்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

நாய், பூனை போன்ற விலங்குகள் கடித்தால் வெறிநாய்கடிக்கான தடுப்பூசிகளை முழுமையாகச் செலுத்திக் கொள்ள வேண்டும். கொசுக்களால் பரவும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தொற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க கொசுவலை, கொசு விரட்டிகளை உபயோகப்படுத்த வேண்டும். வீட்டிலும், சுற்றுப்புறத்திலும் வளா்க்கப்படும் கால்நடைகள், பிற விலங்குகளின் கழிவுகளைச் சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.

ஸ்கரப்டைபஸ், குரங்குக் காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து தற்காத்து கொள்ள தகுந்த பாதுகாப்பின்றி காடுகளில் நுழைவதையும், தகுந்த பாதுகாப்பின்றி புதா், புல்வெளிகளில் ஓய்வு எடுப்பதையும் தவிா்க்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடா்ந்து, விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் தடுப்புத் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ரதிதிலகம், துணை முதல்வா் கெளரி வெலிங்கண்ட்லா, குடியிருப்பு மருத்துவ அலுவலா் இன்பராஜ், மருத்துவா்கள் பாலாஜி, மணிமேகலை, செவிலியா்கள், மாணவ- மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT