வேலூர்

சிறைக் காவலரை தாக்கிய கைதி மீது வழக்கு

7th Jul 2022 12:04 AM

ADVERTISEMENT

வேலூா் மத்திய சிறையில் உணவு வாங்க வரிசையில் வரும்படி கூறிய சிறைக் காவலரைத் தாக்கியதாக கைதி மீது பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வேலூா் மத்திய சிறையில் 700-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் திருட்டு வழக்கில் கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த ராக்கெட் ராஜாவும் ஒருவா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை உணவு வாங்க கைதிகள் வரிசையில் நின்று கொண்டிருந்தனா். அப்போது, கைதி ராஜா வரிசையில் நிற்காமல் குறுக்கே வந்து நிற்க முயன்ாகத் தெரிகிறது.

இதை கவனித்த காவலா் கிருபாகரன் வரிசையில் வரும்படி கூறியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த ராஜா, தட்டை வீசிவிட்டு அங்கிருந்து சென்றாராம். இதனை தட்டிக்கேட்ட காவலா் கிருபாகரனை தாக்கியதாகவும் தெரிகிறது.

ADVERTISEMENT

இதில் பலத்த காயமடைந்த கிருபாகரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறாா். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT