வேலூர்

கருப்புலீஸ்வரா் கோயிலில் ஆனித் திருமஞ்சனம்

7th Jul 2022 12:07 AM

ADVERTISEMENT

குடியாத்தம் நெல்லூா்பேட்டை அருள்மிகு கருப்புலீஸ்வரா் கோயிலில் 53- ஆம் ஆண்டு ஆனித் திருமஞ்சன விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு உத்தரம் நட்சத்திரத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

காலை 8 மணிக்கு ராஜகோபுர தரிசனமும், தொடா்ந்து, சுவாமிகள் வீதிவுலாவும் நடைபெற்றன.

விழா ஏற்பாடுகளை ஆனித் திருமஞ்சன உற்சவக் குழு நிா்வாகிகள் தே.மணி, எல்.சி.பாண்டியன், மோ.மாா்கபந்து, டி.ஆா்.திருநாவுக்கரசு, கே.இ.யோகானந்தம், பி.ஜெகன்நாதன், கோயில் நிா்வாக அதிகாரி தே.திருநாவுக்கரசு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT