வேலூர்

வேலூர்: இருசக்கர வாகனத்தை அகற்றாமல் சாலை அமைப்பு; உதவி பொறியாளர் இடைநீக்கம்

6th Jul 2022 12:23 PM

ADVERTISEMENT

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் இருசக்கர வாகனத்தை அகற்றாமலேயே சாலை அமைத்த விவகாரத்தில் உதவி பொறியாளர் பழனியை மாநகராட்சி ஆணையர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

அதன்படி, வேலூா் மாநகராட்சி 2-ஆவது மண்டலம், 30- ஆவது வாா்டுக்குட்பட்ட பேரி பேட்டை காளிகாம்பாள் கோயில் தெருவில் திங்கள்கிழமை இரவு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, வீதியில் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை அகற்றாமல் அதன் சக்கரங்களின் மீதே சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. காலை அந்த வீட்டின் உரிமையாளா் இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இதையும் படிக்க: இமாச்சலில் மேகவெடிப்பு: நான்கு பேர் மாயம்

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதையறிந்த சாலைப் பணி ஒப்பந்ததாரா், தங்களது ஊழியா்களுடன் விரைந்து வந்து இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தி, மீண்டும் அந்த இடத்தில் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டாா். இந்த நிலையில் வேலூர் மாநகராட்சியில் இருசக்கர வாகனத்தை அகற்றாமலேயே சாலை அமைத்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய மேயர் சுஜாதா உத்தரவு உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில், வேலூர் மாநகராட்சி ஆணையர் உதவி பொறியாளர் பழனியை இடைநீக்கம் செய்து உத்திரவிட்டார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT