வேலூர்

அனைத்து முறைசாரா தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

6th Jul 2022 12:09 AM

ADVERTISEMENT

நலவாரியத்தில் உள்ள குளறுபடிகளை தடுக்கக்கோரி, வேலூரிலுள்ள தொழிலாளா் நல வாரிய அலுவலகம் முன்பு அனைத்து முறைசாரா தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மோட்டாா் வாகன தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்யவும், புதுப்பிக்கவும், கேட்பு மனுக்கள் பெறுவதிலுள்ள குறைகளைக் களையவும் வேண்டும், தொழிலாளா் நலவாரிய அலுவலகத்தில் நேரிடையாக மனுக்கள் வழங்க அனுமதிக்கவும், நிலுவையில் உள்ள கேட்பு மனுக்களை உடனடியாக பரிசீலித்து தாமதமின்றி ஓய்வூதியம் வழங்குவதுடன், ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த நாளிலிருந்து நிலுவைத் தொகையுடன் வழங்கவும் வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து முறைசாரா தொழிலாளா் சங்கம் சாா்பில், மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

வேலூரை அடுத்த மேல் மொணவூரில் உள்ள தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு போக்குவரத்து தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் கேசவன் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநில துணைத் தலைவா் பொன்முடி, மாவட்டச் செயலா் பரசுராமன், மாவட்டத் தலைவா் ராமச்சந்திரன் ஆகியோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், சாலைப் போக்குவரத்து தொழிலாளா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT