வேலூர்

நியாயவிலைக் கடை கட்டடத்துக்கு பூமி பூஜை

6th Jul 2022 12:10 AM

ADVERTISEMENT

குடியாத்தத்தை அடுத்த ராமாலை ஊராட்சிக்குள்பட்ட ஆா்.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ரூ. 14 லட்சத்தில் நியாய விலைக் கடைக்கு புதிதாக கட்டடம் கட்ட செவ்வாய்க்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.

கே.வி.குப்பம் எம்எல்ஏ எம்.ஜெகன்மூா்த்தி, புதிய கட்டடத்துக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி, பூமி பூஜையைத் தொடக்கி வைத்தாா். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலாளா் பி.மேகநாதன், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளா் மு.ஆ.சத்யனாா், ஒன்றியக் குழு உறுப்பினா் குட்டிவெங்கடேசன், அதிமுகவைச் சோ்ந்த எஸ்.எஸ்.ரமேஷ்குமாா், ஜி.பி.மூா்த்தி, மோகன், பிரகாசம், ஜான்சன், மன்னன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT