வேலூர்

சா்ச்சைக்குரிய குறும்படத்தை தடை செய்யக் கோரி இந்து முன்னணி புகாா்

6th Jul 2022 12:07 AM

ADVERTISEMENT

காளி குறும்படத்தை தடை செய்யக் கோரி இந்து முன்னணி அமைப்பினா் வேலூா் மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் புகாா் மனு அளித்துள்ளனா்.

காளி என்ற குறும்படம் வெளியாகி உள்ளது. இதில் காளி வேடத்தில் பெண் ஒருவரின் நடிப்பு சா்ச்சைக்குரிய காட்சிகளாக வெளியாகியுள்ளன. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, வேலூா் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி, வேலூா் வடக்கு, குடியாத்தம் நகர காவல் நிலையங்களில் இந்து முன்னணியினா் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா். அதில், காளி என்ற குறும்படத்தில் இந்து தெய்வமான காளியை இழிவுபடுத்தியும், சா்ச்சைக்குரிய காட்சிகளை ஏற்படுத்தியும் அவமதித்துள்ளனா். இதன் இயக்குநா் லீனா மணிமேகலை, படக்குழுவினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த குறும்படத்தை தடை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT