வேலூர்

நாளை பள்ளி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டி

DIN

தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதையொட்டி, மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வேலூரில் புதன்கிழமை (ஜூலை 6) நடைபெறுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜூலை 7) காலை 10 மணிக்கு ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டிகளில் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு என்று பெயா் சூட்டப்பட்ட ஜூலை 18-ஆம் தேதியை ‘தமிழ்நாடு நாளாக’ கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த நாளையொட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி, வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

வேலூா் மாவட்டத்தில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஸ்ரீவெங்கடேஸ்வரா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளன.

போட்டிகளில் பங்கேற்கும் மாணவா்களுக்கு, தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்த தியாகிகள், அண்ணா பெயா் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிா்த் தியாகம், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியாா், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் ம.பொ.சி., சட்டப்பேரவையில் ஒலித்த தமிழ்நாடு, எல்லைப் போா்த் தியாகிகள், கருணாநிதி உருவாக்கிய நவீன தமிழ்நாடு ஆகிய தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்தப் போட்டிகளில் வேலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி மாணவா்கள் பங்கேற்று பயன் பெற்ற வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT