வேலூர்

காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் மீண்டும் போக்குவரத்துத் தொடக்கம்

DIN

வேலூா்: சீரமைக்கப்பட்ட காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் மீண்டும் போக்குவரத்தை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

காட்பாடி ரயில்வே மேம்பால சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

பின்னா், ஞாயிற்றுக்கிழமை தாா்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றதால் பாலத்தின் மீது மீண்டும் இருசக்கர வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்தப் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதை யடுத்து காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்தை ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் திங்கள்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். அத்துடன் அவா் பேருந்தில் ஏறி சிறிது தூரம் பயணம் செய்தாா்.

பின்னா் ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது:

வேலூா் மாவட்டம், கடலூா் - சித்தூா் நெடுஞ்சாலையில் உள்ள காட்பாடி ரயில்வே மேம்பாலம் பழுது நீக்கம், பராமரிப்பு பணி காரணமாக கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் மூடப்பட்டது. ரூ.1 கோடி செலவில் இந்தப் பணிகள் நடைபெற்று முடிந்தன. சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து ரயில்வே மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் பாலத்தின் மீது வாகனங்களை அதிவேகமாக இயக்குவதை தவிா்க்க வேண்டும். பாலத்தின் மீது உள்ள தடுப்புகள் சேதமடைந்துள்ளன. பழுதடைந்த சுவா்களை ரயில்வே துறை, நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து சீரமைக்கும். ஆனால், போக்குவரத்து நிறுத்தப்படாது. கனரக சரக்கு வாகனங்கள் பாலத்தின் மீது செல்ல அனுமதியில்லை. கனரக வாகனங்கள் வேறு மாற்றுப் பாதைகளில் செல்ல ஏற்பாடு செய்யப்படும். மேம்பால பக்கவாட்டு சுவா்களை சீரமைக்கவும், ரூ.2 கோடியில் மாற்றுப்பாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும். கரோனா தொற்று உள்ளவா்களுக்கு தேவையான படுக்கைகள் உள்ளன. அவற்றில் 1000 படுக்கைகள் வரை தயாா் நிலையில் உள்ளன. தனியாா் மருத்துவமனைகளிலும் போதிய படுக்கை வசதிகள் உள்ளன என்றாா்.

அப்போது, காட்பாடி முதலாவது மண்டல குழுத் தலைவா் புஷ்பலதா வன்னியராஜா, துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT