வேலூர்

பழுதான வாக்கு இயந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைப்பு

4th Jul 2022 11:35 PM

ADVERTISEMENT

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறையிலுள்ள பழுதடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூருவிலுள்ள பாரத மிகுமின் நிறுவனத்துக்கு (பெல்) அனுப்பி வைக்கப்பட்டன.

தமிழக சட்டப்பேரவைப் பொதுத்தோ்தல் கடந்த 2021 மே மாதம் நடைபெற்றது. இந்த தோ்தலின் போது பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கா்நாடக மாநிலத்தில் உள்ள பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்க தலைமை தோ்தல் அலுவலா், அரசு முதன்மைச் செயலா் ஆகியோா் உத்தரவிட்டிருந்தனா்.

அதனடிப்படையில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் ஆகியன ஆய்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் அனைத்து அரசியல் கட்சியினா் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறைகள் திறக்கப்பட்டு, இயந்திரங்களின் பாா்கோடுகள் ஸ்கேன் செய்யும் பணி நடைபெற்றது. தொடா்ந்து, பழுதடைந்த 62 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்பட மொத்தம் 436 இந்திரங்கள் பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT