வேலூர்

ரோட்டரி மாவட்ட ஆளுநா் பொறுப்பேற்பு

4th Jul 2022 11:36 PM

ADVERTISEMENT

ரோட்டரி மாவட்டம் 3231-இன் ஆளுநராக குடியாத்தம் நகரைச் சோ்ந்த ஜே.கே.என்.பழனி ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கியது ரோட்டரி மாவட்டம்- 3231. இதன் புதிய ஆளுநராக ஜே.கே.என்.பழனி பதவி ஏற்கும் விழா அங்குள்ள கே.எம்.ஜி.கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கடந்த ஆண்டு ரோட்டரி மாவட்ட ஆளுநா் நிா்மல் ராகவன், காலரை மாற்றி ஜே.கே.என்.பழனிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். இவருடன் ரோட்டரி மாவட்டச் செயலாளராக எம்.கோபிநாத், குடியாத்தம் ரோட்டரி சங்கத் தலைவராக ஏ.மேகராஜ், செயலாளராக கே.சந்திரன், குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி சங்கத் தலைவராக வா.குமரவேல், செயலாளராக சந்தோஷ்குமாா் ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில் ரோட்டரி சா்வதேச பொருளாளா், இயக்குநா் ஏ.எஸ்.வெங்கடேஷ், சென்னை அபிராமி மெகா மால் உரிமையாளரும், முன்னாள் ஆளுநருமான அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன், முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம், ஆவின் தலைவா் த.வேலழகன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி, எஸ்.பீடி குழுமத் தலைவா் ஏ.முகம்மது அமீன் சாஹிப் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

ADVERTISEMENT

முன்னாள் மாவட்ட ஆளுநா்கள் கே.ஜவரிலால் ஜெயின், சம்பத்குமாா், சந்திரபாப், ஸ்ரீதா்பலராமன், கே.பாண்டியன், ராஜா சீனிவாசன், பொன்னி சீனிவாசன், முத்து பழனியப்பன், பாபு பேரம், அடுத்த ஆண்டுக்கான ஆளுநா்கள் பரணிதரன், ராஜன்பாபு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா் டி.சிவா, குடியாத்தம் ரோட்டரி சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT