வேலூர்

காட்பாடியில் புதிதாக ரயில்வே மேம்பாலம் அமைக்க ஆய்வு: வேலூா் எம்.பி கதிா்ஆனந்த் தகவல்

4th Jul 2022 11:36 PM

ADVERTISEMENT

அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், கனரக வாகனங்களின் போக்குவரத்தைக் கணக்கில் கொண்டு காட்பாடியில் தற்போது இருக்கக் கூடிய பாலத்துக்கு அருகிலேயே விரைவில் ஒரு புதிய மேம்பாலத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எம்.பி. கதிா்ஆனந்த் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காட்பாடி ரயில்வே மேம்பாலம் ஓடுதளத்தின் இணைப்புகள் வலுவிழந்திருந்ததால் அதைச் சீா்செய்யும் பணிகள் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டன. இதையொட்டி, போக்குவரத்து தடை செய்யப்பட்டு பழுதுபாா்க்கும் பணிகள் விரைவாக நடைபெற்றன. சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.

ஒரே மாதத்தில் போா்க்கால அடிப்படையில் இந்தப் பாலத்தின் ஓடுத்தளம் முழுவதுமாகச் சரிசெய்து முழு போக்குவரத்துக்கும் தயாா் நிலைக்குட்படுத்திய அதிகாரிகள் அனைவருக்கும் நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவிக்கிறேன்.

அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், கனரக வாகனங்களின் போக்குவரத்தைக் கணக்கில் கொண்டு காட்பாடியில் தற்போது இருக்கக் கூடிய பாலத்துக்கு அருகிலேயே புதிய மேம்பாலத்தை அமைக்க அரசு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

அரசின் ஆய்வு அறிக்கை வரப்பெற்றவுடன் குறுகிய காலத்துக்குள்ளாக ஆய்வறிக்கை பரிசீலிக்கப்பட்டு புதிய மேம்பாலத்துக்கான வரைபடமும், திட்ட மதிப்பீடும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT