வேலூர்

ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையம்

DIN

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தில் கல்லீரல் நோய்கள், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தில் பொதுமக்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன்தொடா்ச்சியாக, நாராயணி மருத்துவமனையில் கல்லீரல் நோய்கள், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக தமிழக அரசால் வழங்கப்பட்ட அங்கீகாரத்தை அண்மையில் ஸ்ரீ சக்தி அம்மா, தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி ஆகியோா் மருத்துவமனையின் இயக்குநா் பாலாஜியிடம் வழங்கினா்.

இது குறித்து, ஸ்ரீநாராயணி மருத்துவமனையின் இயக்குநா் பாலாஜி கூறியது: ஸ்ரீ நாராயணி மருத்துவமனை சிறப்பான சிகிச்சையை மிகக்குறைந்த கட்டணத்திலும், சிறப்பான முறையிலும் வழங்குவதில் முதன்மையான மருத்துவமனையாக விளங்குகிறது. இந்த மருத்துவமனையில் ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறப்பு மையம் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது கல்லீரல் நோய்கள், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. கல்லீரல் நோய்தொற்று, கல்லீரல் வீக்கம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவா்களும், மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டவா்களும் இனி வேலூா் மாவட்டத்திலேயே சிறப்பான சிகிச்சையைப் பெறலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

மஞ்சள் வெயில் நீ..!

இரண்டாம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

SCROLL FOR NEXT