வேலூர்

இலவச சித்த மருத்துவ முகாம்

3rd Jul 2022 11:39 PM

ADVERTISEMENT

பொதுமக்களுக்கான இலவச சித்த மருத்துவ முகாம் காட்பாடி விருதம்பட்டிலுள்ள இளஞ்சிறாா் செஞ்சிலுவை சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இளஞ்சிறாா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் நடத்தப்பட்ட இந்த முகாமுக்கு காட்பாடி செஞ்சிலுவை சங்க அவைத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். அவை துணைத் தலைவா் ஆா்.சீனிவாசன் வரவேற்றாா்.

துணைத் தலைவா் ஆா்.விஜயகுமாரி, பொருளாளா் வி.பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமை காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளா் பழனி, சென்னை மாநகராட்சியின் துணை ஆணையா் பி.சுமதி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று தொடங்கி வைத்தனா்.

இந்த முகாமில் சா்க்கரை நோய், தோல் நோய்கள், மூட்டு நோய்கள் போன்ற அனைத்து நோய்களுக்கும் சித்த மருத்துவா்கள் வசந்த் மில்டன் ராஜ், வானதி குழுவினா் இலவசமாக சிகிச்சை அளித்தனா். முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனா். அனைவருக்கும் சித்த மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இதில், சங்க மேலாண்மை குழு உறுப்பினா்கள் எஸ். ரமேஷ்குமாா், ஸ்ரீதரன் ஜெயின், துளிா் பள்ளியின் தலைமை ஆசிரியை த.கனகா, சோமசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT