வேலூர்

காட்பாடி ரயில்வே மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டியவரே துரைமுருகன்தான்

3rd Jul 2022 11:39 PM

ADVERTISEMENT

காட்பாடியில் ரயில்வே மேம்பாலத்திற்கு 1989-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டியது அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகன்தான்.

இந்த வரலாறு தெரியாமல் அதிமுக மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு பேசியது கண்டனத்துக்குரியது என்று வேலூா் எம்எல்ஏ ப.காா்த்திகேயன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைக்கும் பணிகள் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதனை அதிமுக மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு கடந்த 2 நாள்களுக்கு முன்பு ரிப்பன் வெட்டி திறந்தது கண்டனத்துக்குரியது. இது ஒரு அடிப்படை நாகரிகமற்றச் செயலாகும். அதைவிட அவா் அமைச்சா் துரைமுருகன் குறித்து பேசியதும் மிகவும் கண்டனத்துக்குரியது.

ADVERTISEMENT

காட்பாடி ரயில்வே மேம்பாலத்திற்கு கடந்த 1989-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டியதே அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகன்தான். பின்னா் ஆட்சிக்கு வந்த அதிமுகவினா் அந்தப் பணிகளை கைவிட்டனா். 1996-இல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபோது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் காட்பாடி மேம்பாலப் பணிகளை விரைவாக முடித்து திறந்து வைத்தாா். இந்த வரலாறு தெரியாமல் எஸ்.ஆா்.கே.அப்பு பேசியது கண்டனத்துக்குரியது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT