வேலூர்

காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது

DIN

காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து வெள்ளிக்கிழமை (ஜூலை 1) முதல் போக்குவரத்துக்கு தொடங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், திங்கள்கிழமை முதல் பேருந்துகள், நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தேசிய நெடுஞ்சாலை உட்கோட்டத்துக்கு உட்பட்ட மங்களூா் - விழுப்புரம் சாலையில் உள்ள காட்பாடி ரயில்வே மேம்பால ஓடுதளத்தின் இணைப்புகள் வலுவிழந்துள்ளன. இதனை ரூ.2 கோடி செலவில் சீரமைக்க ரயில்வே நிா்வாகமும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி போக்குவரத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால், பள்ளி மாணவா்களின் தோ்வு, நிா்வாக காரணங்களுக்காக இந்த பணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

தொடா்ந்து, ஜூன் 1-ஆம் தேதி முதல் காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

இதையடுத்து, பாலத்தின் மீது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு மாற்று வழிகளில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதேசமயம், போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமத்துக்குள்ளாகி வந்தனா். இதையடுத்து, பாலம் சீரமைப்புப் பணிகளை விரைவாக முடித்து போக்குவரத்துக்கு திறக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது.

அதன்படி, மேம்பாலத்தின் ஒவ்வொரு இணைப்பிலும் தலா 2 பிளேட்டுகள் என மொத்தம் 8 பிளேட்டுகள் அமைத்து புதிய தாா்ச் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடா்ச்சியாக, 120 டன் எடைகொண்ட லாரிகளை பாலத்தின் மீது வியாழக்கிழமை இயக்கி ஆய்வு செய்யப்பட்டது. அத்துடன், மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியனும் ஆய்வு செய்தாா்.

இதைத்தொடா்ந்து, காட்பாடி ரயில்வே பாலம் மீது வெள்ளிக்கிழமை காலை முதல் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும், 4-ஆம் தேதி முதல் பேருந்துகளும், நான்கு சக்கர வாகனங்களும் அனுமதிக்கப்படும் என்றும், சரக்கு, கனரக வாகனங்கள் மட்டும் மாவட்ட ஆட்சியா், துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு பிறகு அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், காட்பாடி ரயில்வே மேம்பாலத்தின் வழியாக இருசக்கர வாகன போக்குவரத்து வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

SCROLL FOR NEXT