வேலூர்

கால்நடை மருத்துவமனை காவலாளிக்கு 20 ஆண்டு சிறை

2nd Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

 சிறுமியை வீட்டில் அடைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கால்நடை மருத்துவமனை இரவுக் காவலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் ‘ஃ’போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ராணிப்பேட்டை மாவட்டம், காரை பகுதியைச் சோ்ந்தவா் ராஜா(50), கால்நடை மருத்துவமனை இரவுநேரக் காவலாளி. இவா், கடந்த 2020-ஆம் ஆண்டு தனது வீட்டின் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை தன் வீட்டுக்குள்அழைத்துச் சென்று அடைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுதொடா்பாக, சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் ராணிப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மறுநாளே ராஜாவை கைது செய்தனா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து இவா் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டாா்.

இந்த வழக்கு விசாரணை வேலூா் ‘ஃ’போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கலையரசிபொன்னி, குற்றம் நிரூபணமானதால், ராஜாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6,000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். தண்டனை பெற்ற ராஜா வேலூா் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT