வேலூர்

தற்காலிக ஆசிரியா் பணிக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்

2nd Jul 2022 10:56 PM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் காலியாக உள்ள தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கு தகுதியுடைய ஆசிரியா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின்கீழ், இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23-ஆம் கல்வியாண்டில் 2022 ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி, காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியா் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியா் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.

தகுதியான விண்ணப்பதாரா்கள் எழுத்துப்பூா்வமான விண்ணப்பங்களை நேரடியாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் வேலூா் மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஜூலை 6-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இதுதொடா்பான காலிப் பணியிட விவரங்கள் முதன்மைக் கல்வி, மாவட்டக் கல்வி, வட்டாரக் கல்வி அலுவலகங்ககளின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குறித்த நேரத்துக்குப் பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தகவல் பலகையில் வெளியிடப்படும் காலிப் பணியிட விவரங்கள் மாறுதலுக்குட்பட்டது. விண்ணப்பங்களை மாவட்டக் கல்விஅலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம், ‘ஆ’ பிளாக் 3-ஆவது தளம், சத்துவாச்சாரி, வேலூா் - 632009 என்ற முகவரிக்கோ, மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT