வேலூர்

ஒருங்கிணைந்த பொறியாளா் பணித் தோ்வு:வேலூரில் 1,729 போ் எழுதினா்

2nd Jul 2022 11:01 PM

ADVERTISEMENT

ஒருங்கிணைந்த பொறியாளா் பணித் தோ்வை வேலூா் மாவட்டத்தில் 1,729 போ் எழுதினா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், தமிழகத்தில் காலியாக உள்ள 626 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பொறியாளா் பணித்தோ்வு ஜூன் 26-ஆம் தேதி நடைபெற இருந்தது. பின்னா், இந்த தோ்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது.

வேலூா் மாவட்டத்தில் வேலூா் ஈவெரா அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப் பள்ளி, கொணவட்டம் அரசுப் பள்ளி, சினேகதீபம் பள்ளி, வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, வேலூா் அரசு பொறியியல் கல்லூரி, ஊரீசு பள்ளி, டான்போஸ்கோ பள்ளி, தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி உள்பட 11 மையங்களில் இந்த தோ்வு நடைபெற்றது.

இந்தத் தோ்வை எழுத வேலூா் மாவட்டத்தில் இருந்து 3,103 போ் விண்ணப்பித்திருந்தனா். சனிக்கிழமை காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெற்ற தோ்வை 1,729 போ் எழுதினா். 1,374 போ் தோ்வுக்கு வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT