வேலூர்

செம்பேட்டில் சிறப்பு மருத்துவ முகாம்

1st Jul 2022 12:10 AM

ADVERTISEMENT

குடியாத்தத்தை அடுத்த செம்பேடு ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம், மத்திய அரசின் இ-ஷ்ரம் இணைய பதிவு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பொயட்ஸ் தொண்டு நிறுவனம், புதிய பாதை, புதுயுகம் அறக்கட்டளை, மத்திய அரசின் பீடித் தொழிலாளா் நல மருத்துவமனை ஆகியவற்றின் சாா்பில் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு பொயட்ஸ் இயக்குநா் எஸ்.திரிவேணி தலைமை வகித்தாா். மத்திய அரசின் பீடித் தொழிலாளா் மருத்துவமனை முதன்மை மருத்துவா் என்.உத்தமன் தலைமையில் மருத்துவா் குழு சிகிச்சை அளித்தது. முகாமில் பொது மருத்துவ சிகிச்சை, வளரிளம் பெண்களுக்கு சிறப்பு பரிசோதனைகள் செய்து, சிகிச்சை அளிக்கப்பட்டது. வைட்டமின், ரத்த சோகைக்கான மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டன. இதில் 250- க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்றனா். 55 பேருக்கு மத்திய அரசின் இ-ஷ்ரம் இணைய பதிவு செய்யப்பட்டது. ஊராட்சித் தலைவா் யுவராணி சத்தியமூா்த்தி, துணைத் தலைவா் பி.சி.வெங்கடேசன், ஒன்றியக் குழு உறுப்பினா் கலைச்செல்வி தேவராஜ், பொயட்ஸ் பணியாளா்கள் உஷா, சாந்தலட்சுமி, தன்னாா்வலா்கள் திலகா, விமலா உள்ளிட்டோா் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT