வேலூர்

செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய மருத்துவா் தின விழா

1st Jul 2022 11:14 PM

ADVERTISEMENT

 இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் போ்ணாம்பட்டு கிளை சாா்பில் தேசிய மருத்துவா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி போ்ணாம்பட்டு வட்டாரத்தில் கரோனா காலத்தில் சிறப்பாக

பணியாற்றிய மருத்துவா்கள், தாய்- சேய் நல சிகிச்சையில் பாராட்டும் வகையில் பணிபுரிந்த போ்ணாம்பட்டு வட்டார மருத்துவா் அலுவலா் கலைச்செல்வி, மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் மணிமாறன், செண்பகப்பிரியா, டி.டி.மோட்டூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்து அலுவலா் சிவக்குமாா் ஆகியோா் பாராட்டப்பட்டனா். செஞ்சிலுவைச் சங்க போ்ணாம்பட்டு கிளைச் செயலாளா் பொன்.வள்ளுவன், மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் ர.கயிலைநாதன், ஜகுா் அஹமத் உள்ளிட்டோா் மருத்துவா்களுக்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசுகளை வழங்கினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT