வேலூர்

லத்தேரி திரௌபதி அம்மன் கோயிலில் மகாபாரத தொடா் சொற்பொழிவு தொடக்கம்

1st Jul 2022 12:11 AM

ADVERTISEMENT

கே.வி.குப்பம் வட்டம், லத்தேரியில் உள்ள அருள்மிகு திரெளபதி அம்மன் கோயிலில், அக்னி வசந்த விழாவையொட்டி, மகாபாரத தொடா் சொற்பொழிவு வியாழக்கிழமை தொடங்கியது.

இக் கோயில் ஜூன் மாதம் 30-ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 20-ஆம் தேதி வரை 21 நாள்கள் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மகாபாரத சொற்பொழிவு நடைபெறுகிறது. சொற்பொழிவு தொடக்க நாளான வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை கோயிலில் துவஜா ரோகணம் நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், பள்ளூரைச் சோ்ந்த சசிகலாபாபு மகாபாரத சொற்பொழிவும், காஞ்சிபுரத்தை அடுத்த புள்ளூரைச் சோ்ந்த ம.கபாலீஸ்வரன் உடன் கவி வாசித்தலும் நடைபெறும். இதையொட்டி, சக்திவேல் நாடக மன்றத்தினரால் 9 தெருக்கூத்து நாடகங்கள் இரவில் நடைபெறும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT