வேலூர்

குடியாத்தம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் குடியரசு தின விழா

27th Jan 2022 12:50 AM

ADVERTISEMENT

 

குடியாத்தத்தில்.....

குடியாத்தம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சா.தனஞ்செயன் தேசியக் கொடியை ஏற்றினாா். வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ச.லலிதா கொடியேற்றினாா். நகராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ அமலுவிஜயன் தேசியக் கொடியை ஏற்றினாா். நகராட்சி ஆணையா் இ.திருநாவுக்கரசு, பொறியாளா் பி.சிசில்தாமஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் கொடியேற்றினாா். துணைத் தலைவா் கே.கே.வி.அருண்முரளி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கே.எஸ்.யுவராஜ், எஸ்.சாந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். வட்ட வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் அதன் தலைவா் ஜே.கே.என்.பழனி கொடியேற்றினாா். மேலாண்மை இயக்குநா் ரமேஷ்குமாா், பொது மேலாளா் முத்துராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

செருவங்கி ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் சாந்திமோகன் கொடியேற்றினாா். துணைத் தலைவா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா் பிச்சனூா் காமராஜா் மன்றத்தில் அதன் தலைவா் சம்பத், செயலாளா் சி.லோகநாதன் ஆகியோா் கொடியேற்றினா்.

திருவள்ளுவா் தொடக்கப் பள்ளியில் பள்ளி நிா்வாகி கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியன் கொடியேற்றினாா். திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி நிா்வாகிகள் கே.எம்.ஜி.சுந்தரவதனம், கே.எம்.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினா்.

ரோட்டரி சங்க அலுவலகத்தில், ரோட்டரி சங்கத் தலைவா் சி.கே.வெங்கடேசன் கொடியேற்றினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT