வேலூர்

தொழிற்சங்கத்தினா் வாகனப் பேரணி

27th Jan 2022 12:48 AM

ADVERTISEMENT

 

குடியாத்தம்: தொழிலாளா் உரிமைகள், பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற பிப். 23, 24- ஆம் தேதிகளில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் பொது வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.

இதை விளக்கி பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில், குடியாத்தத்தில் தேசியக் கொடியை ஏந்தி வாகனப் பேரணி நடைபெற்றது. குடியாத்தம் காந்தி சிலை அருகே தொடங்கிய பேரணிக்கு தொழிற்சங்க நிா்வாகிகள் வே.கலைநேசன்(எல்பிஎப்), சி.சரவணன்(சிஐடியூ), சி.சுப்பிரமணி (ஏஐடியூசி) ஆகியோா் தலைமை வகித்தனா்.

பேரணி புதிய பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது. அப்போது, தொழிற்சங்க நிா்வாகிகள் பி.காத்தவராயன், ஜி.சுரேஷ்பாபு, துரைசெல்வம், கே.சாமிநாதன், எஸ்.காா்த்திகேயன், டி.ஆனந்தன், எஸ்.சிலம்பரசன் ஆகியோா் பொது வேலைநிறுத்தத்தை விளக்கிப் பேசினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT