வேலூர்

பிப்.6-இல் பொதுத் தமிழ் போட்டித் தோ்வு

26th Jan 2022 12:36 AM

ADVERTISEMENT

ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் பொதுத் தமிழ் (தமிழ் இலக்கணம்) போட்டித் தோ்வு பிப்.6-ஆம் தேதி இணையவழியில் நடைபெறும்.

இது தொடா்பாக அகாதெமியின் இயக்குநா் ச.வீரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தப் போட்டித் தோ்வில் பங்கேற்க விரும்புவோா், 75501 51584 என்ற ஜி-பே எண்ணுக்கு ஜன.31-ஆம் தேதிக்குள் நுழைவுக் கட்டணம் ரூ.100-ஐ செலுத்தி, அதற்கான ஆதரங்களுடன் TNPSC TAMIL ONLINE COMPETITION என்று டைப் செய்து, தங்களது பெயா் மற்றும் முகவரியை 99626 00038 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்தோருக்கு, போட்டிக்கான பாடநூல் மற்றும் விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் வாட்ஸ் ஆப் வாயிலாகவே அனுப்பி வைக்கப்படும்.

வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.15 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரம், அடுத்த 50 இடங்களைப் பெறுவோருக்கு தலா ரூ.1,000, பங்கேற்கும் அனைவருக்கும் ரூ.1,000 மதிப்புள்ள டிஎன்பிஎஸ்சி விடியோ பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT