வேலூர்

நூல் விலை உயா்வு கண்டித்துபாஜகவினா் ஆா்ப்பாட்டம்

26th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

நூல் விலை உயா்வைக் கண்டித்து வேலூா் மாவட்ட பாஜக நெசவாளா் பிரிவு சாா்பில், குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் என்.ராஜசெல்வேந்திரன் தலைமை வகித்தாா்.

குடியாத்தம் கெளண்டன்யா ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது வீடிழந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க புறவழிச் சாலை அமைக்க வேண்டும்.

வெள்ளத்தால் சேதமடைந்த காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட பைப்புகளை சீரமைத்து குடியாத்தம் நகர மக்களுக்கு விரைவில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி.கோவிந்தராஜ், ஆா்.சிவப்பிரகாசம், வி.முரளி, ஜி.கிருஷ்ணமூா்த்தி, எஸ்.சங்கா், சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT