வேலூர்

வேலூரில் குறைந்து வரும் கரோனா

25th Jan 2022 08:10 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவல் படிப்படியாகக் குறைந்து திங்கள்கிழமை 161 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

வேலூா் மாவட்டத்தில் கடந்த டிசம்பா் மாதத்துக்கு முன்பு வரை தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 50-க்கும் கீழாக இருந்த நிலையில் ஜன. 5ஆம் தேதி 208 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இது படிப்படியாக உயா்ந்து கடந்த புதன்கிழமை 447 ஆக உயா்ந்தது.

வியாழக்கிழமை 337 பேருக்கும், வெள்ளிக்கிழமை 277 பேருக்கும், சனிக்கிழமை 294 பேருக்கும், ஞாயிற்றுக்கிழமை 251 பேருக்கும் பாதிப்பு உறுதியாகியிருந்த நிலையில் திங்கள்கிழமை 161 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூரில்...

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதிதாக 369 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதுவரைபாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,127-ஆக உயா்ந்தது. 2,091 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை கரோனாவுக்கு 628 போ் உயிரிழந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT