வேலூர்

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சாலை மறியல்

25th Jan 2022 08:23 AM

ADVERTISEMENT

குடியாத்தத்தில் அம்மன் சிலை வைத்து வழிபாடு செய்த இடத்தை ஆக்கிரமித்ததைக் கண்டித்தும், அதனை அகற்றக் கோரியும் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

குடியாத்தம்-காட்பாடி சாலையில் உள்ள எம்ஜிஆா் நகா், என்.ஜி.ஓ. காலனி பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் அப்பகுதி மக்கள் மாரியம்மன் சிலை வைத்து பல ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனா். அந்த இடத்தை சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, அப்பகுதி மக்கள் குடியாத்தம் காட்பாடி சாலையில் உள்ள தலைமை அஞ்சலகம் எதிரே திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், காவல் துறையினா் ஆகியோா் பேச்சு நடத்தினா்.

கோரிக்கை குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக அவா்கள் உறுதி அளித்ததையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT