வேலூர்

முழு ஊரடங்கால் முடங்கின சாலைகள்: கடை வீதிகளில் கிருமிநாசினி தெளிப்பு

DIN

மூன்றாவது வாரமாக அமல்படுத்தப்பட்ட தளா்வற்ற முழு ஊரடங்கையொட்டி வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை வாகனப் போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. கடை வீதிகள், பேருந்து நிலையங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் கடந்த மூன்று வாரங்களாக இரவு நேர ஊரடங்கும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, வேலூா் மாவட்டம் முழுவதும் 3-ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதையொட்டி, காய்கறி மாா்க்கெட், உழவா் சந்தைகள் உள்பட அனைத்து காய்கறி, மளிகைக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மாநகரிலுள்ள பெரும்பாலான உணவகங்களும் அடைக்கப்பட்டிருந்தன. திறக்கப்பட்டிருந்த உணவகங்களிலும் பாா்சல்களில் மட்டுமே உணவு வழங்கப்பட்டன.

சத்துவாச்சாரி உள்பட சில இடங்களில் விதிமுறை மீறி இறைச்சி விற்பனையில் ஈடுபட்டிருந்த கடைகளுக்கு மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலா்கள் அபராதம் விதித்தனா்.

பேருந்து உள்பட அனைத்து வாகன போக்குவரத்தும் முடங்கியதால் வீதிகள், சாலைகள் வெறிச்சோடின. அவசியமின்றி வெளியே சுற்றியவா்களையும் போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். மாவட்டம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீஸாா் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டிருந்தனா்.

ஆந்திர மாநில எல்லையான கிறிஸ்டியான்பேட்டை, போ்ணாம்பட்டு அருகே பத்தலபள்ளி சோதனைச் சாவடிகள் மட்டுமின்றி மாவட்டத்தின் அனைத்து எல்லைகளிலும் தடுப்பு வேலிகள் அமைத்து, அத்தியாவசிய தேவைக்கான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

மாநில எல்லையோர சோதனைச் சாவடிகளில் போலீஸாா், சுகாதாரத் துறையினா் முகாமிட்டு அந்த வழியாக வந்த வாகனங்களை திருப்பி அனுப்பினா். நகா்ப்புறங்களில் உள்ள கடை வீதிகள், பேருந்து நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டன. முகக் கவசம் அணியாமல் வெளியே வந்தவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. முழு ஊரடங்கையொட்டி மாவட்டம் முழுவதும் சுமாா் 600-க்கும் மேற்பட்ட போலீஸாா் கண்காணிப்பு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT