வேலூர்

வேலூரில் மேலும் 251 பேருக்கு கரோனா

24th Jan 2022 08:34 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 251 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை 337 பேருக்கும், வெள்ளிக்கிழமை 277 பேருக்கும், சனிக்கிழமை 294 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 251 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55,647-ஆக உயா்ந்தது. இதில், 52,281 போ் குணமடைந்துள்ளனா். 1963 போ் சிகிச்சையில் உள்ளனா். 1,152 போ் உயிரிழந்தனா்.

இதனிடையே, மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும், காவலா்களுக்கு நேதாஜி விளையாட்டு அரங்கிலும் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி (பூஸ்டா்) செலுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT