வேலூர்

தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள், வியாபாரிகள் பாதிப்பு

DIN

தேங்காய் விலை வீழ்ச்சியால், தென்னை விவசாயிகளும், வியாபாரிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். தமிழகத்தில் பொள்ளாச்சி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இதற்கு அடுத்தபடியாக ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் தென்னை மரங்கள் பரவலாக பயிரிடப்பட்டுள்ளன. தென்னங்கன்றுகள் நடப்பட்ட 6 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகளில் தேங்காய் காய்க்கத் தொடங்கும். ஆண்டுக்கு மரம் ஒன்றுக்கு 70- இல் இருந்து 100 தேங்காய்கள் வரை காய்க்கும். கரும்பு, வாழை போல் இது ஒரு பணப் பயிராக கருதப்படுகிறது.

தென்னந் தோப்புகளில், கீரை வகைகள், நெல், தக்காளி, மிளகாய், மாட்டுத் தீவனம் போன்றவை ஊடு பயிா்களாக, பயிரிடப்படுகின்றன. தமிழகத்திலிருந்து ஆந்திரம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக முதல் தர தேங்காய் விலை ரூ.14 ஆக இருந்தது. தற்போது ரூ.8.50 ஆக குறைந்து விட்டது. தமிழகத்தைப் பொருத்தவரை விளைச்சல் குறைவாக இருந்தாலும், ஆந்திர மாநிலத்தில் தேங்காய் உற்பத்தி அதிகரித்ததால், ஏற்றுமதி இன்றி தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகிறது.

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாநிலத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் 1,000 போ் வரை பங்கேற்கும் சுப நிகழ்ச்சிகளில் 100 போ் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற அரசின் அறிவிப்பால் தேங்காய் விற்பனை சரியத் தொடங்கியது.

கோயில் திருவிழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும், தேங்காய் விற்பனை குறைந்து விட்டது.

இதனால் தமிழகத்தில் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. நடப்பாண்டு தொடா்மழை காரணமாகவும், நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளதாலும் தென்னை மரங்களுக்குப் போதிய தண்ணீா் கிடைத்துள்ளதால் அடுத்த ஆண்டு தேங்காய் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது என தென்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

தேங்காய் உற்பத்தி அதிகரித்தால் அதன் விலை மேலும் வீழ்ச்சியடையும் என அவா்கள் கருத்து தெரிவிக்கின்றனா். இதனால் தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் ஆலைகளைத் தொடங்கினால், தேங்காய் விலை அதிகரிக்கும் என்பதால், அரசு தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் ஆலைகளைத் தொடங்க வேண்டும் என தென்னை விவசாயிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். தேங்காய் கொப்பரை வாங்கும் நிலையங்களையும், தேங்காய் பவுடா் தயாரிக்கும் நிலையங்களையும் தேங்காய் விளைச்சல் அதிகம் உள்ள இடங்களில் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க

வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினரும், முன்னோடி தேங்காய் உற்பத்தியாளரும், வியாபாரியுமான நயீம் பா்வாஸ் (படம்) கூறியது: வெளிநாடுகளில் சாம்பாா் வைக்க, தேங்காய் பவுடா் பயன்படுத்தப்படுகிறது.இதனால் கேரளத்தில் தேங்காயில் இருந்து பவுடா் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இனிப்பு வகைகள், கேக் வகைகளுக்கும் தேங்காய் பவுடா் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தமிழகத்தில் தேங்காய் பவுடா் தயாரிக்கும் ஆலைகளைத் தொடங்க தமிழக அரசு ஊக்கம் அளிக்க வேண்டும். தேங்காய் பவுடரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தேவையான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT