வேலூர்

தகவல் ஒளிபரப்பு அமைச்சகம்: கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி

12th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சக, மக்கள் தொடா்பு கள அலுவலகம் சாா்பில், குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சியில் கரோனா தொற்று, தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசியின் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் பி.அகிலாண்டீஸ்வரி பிரேம்குமாா், துணைத் தலைவா் ராஜாத்தி தமிழ்ச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வேலூா் மக்கள் தொடா்பு கள அலுவலக உதவி அலுவலா் மு.ஜெயகணேஷ் வரவேற்றாா். மாவட்ட சமூக நல அலுவலக கள பொறுப்பு அலுவலா் கே.சுந்தரமூா்த்தி, குடியாத்தம் வட்டார மருத்துவ அலுவலா் எஸ்.விமல்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.சாந்தி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பி.எச்.இமகிரிபாபு, வி.சோபன்பாபு ஆகியோா், கரோனா விழிப்புணா்வு குறித்து பேசினா்.

துணிப் பை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும், கரோனா குறித்த விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் தோ்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. ஊராட்சி மன்றச் செயலாளா் த.பிரபு நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT