வேலூர்

செவிலியா் உடையில் மூதாட்டியிடம் நகை பறித்த இளம்பெண் கைது

12th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமணத்துக்காக செவிலியா் உடையில் சென்று மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட பெண்ணை வேலூா் வடக்கு போலீஸாா் கைது செய்தனா்.

அணைக்கட்டு அருகே உள்ள பிச்சாநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராம்பதியம்மாள்(80). இவா் வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு திங்கள்கிழமை சிகிச்சைக்காக வந்தாா். அங்குள்ள எக்ஸ்ரே அறை முன்பு காத்திருந்தபோது, அவரிடம் செவிலியா் உடை அணிந்திருந்த பெண் பேசியுள்ளாா். எக்ஸ்ரே எடுக்கும்போது நகை அணிந்திருக்கக் கூடாது. அவற்றை கழட்டிக் கொடுக்கும்படி கூறியுள்ளாா். அதை நம்பி ராம்பதியம்மாள் தான் அணிந்திருந்த 2.5 பவுன் தங்க நகைகளை கழட்டிக் கொடுத்தாராம்.

நகையை வாங்கிய அந்த பெண் அவற்றை காகிதத்தில் சுற்றி தருவதாகக் கூறி காலியான காகிதத்தை சுற்றி ராம்பதியம்மாளிடம் அளித்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டாராம். நகையை பறிகொடுத்த ராம்பதியம்மாள் வேலூா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் மருத்துவமனையிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா்.

அவற்றில் இளம்பெண் ஒருவா் செவிலியா் உடையில் மூதாட்டியிடம் நகை வாங்கும் காட்சி பதிவாகியிருந்தது. மேலும், செயின் பறிப்பில் ஈடுபட்ட அந்த பெண் மருத்துவமனையின் வேறு பகுதியில் நின்று கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

ADVERTISEMENT

விசாரணையில் அவா் காட்பாடியைச் சோ்ந்த சுபா(26) என்பதும், விரைவில் நடக்க உள்ள தனது திருமணத்துக்காக றிப்பில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளாா். அவரை போலீஸாா் கைது செய்ததுடன், மூதாட்டியிடம் இருந்து பறித்த 2.5 பவுன் நகையையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT