வேலூர்

ஆய்வாளருக்கு கரோனா: பாகாயம் காவல் நிலையம் மூடல்

12th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

பாகாயம் காவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அந்த காவல் நிலையம் மூடப்பட்டது.

வேலூா் பாகாயம் காவல் ஆய்வாளா் சுபா(40). இவருக்கு கடந்த சில நாள்களாக சளி, இருமல், காய்ச்சல் இருந்து வந்ததாகத் தெரிகிறது. தொடா்ந்து மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

காவல் ஆய்வாளா் கரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து பாகாயம் காவல் நிலையம் முழுவதும் செவ்வாய்க்கிழமை காலை கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தொடா்ந்து காவல் நிலையம் மூடப்பட்டு, அங்கு பணிபுரிந்து வரும் உதவி ஆய்வாளா், காவலா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளும் செய்யப்பட்டன. மேலும், காவல் நிலையத்துக்கு வெளியே பந்தல் அமைத்து போலீஸாா் பொதுமக்களிடம் புகாா் மனுக்களை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT