வேலூர்

புத்தாண்டு பிறப்பு: மக்களுக்கு நள்ளிரவில் இனிப்பு வழங்கிய எஸ்.பி.!

1st Jan 2022 10:14 PM

ADVERTISEMENT

புத்தாண்டு பிறப்பையொட்டி, வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன், பொதுமக்களுக்கு நள்ளிரவில் இனிப்புகள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா்.

கரோனா பரவல் காரணமாக புத்தாண்டு பிறப்பைக் கொண்டாட வேலூா் மாவட்டம் முழுவதும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேசமயம், வெள்ளிக்கிழமை மாலை முதலே பலத்த மழை பெய்து வந்ததால் வேலூா் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்து காணப்பட்டது.

எனினும், நள்ளிரவு 12 மணியளவில், வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன், வேலூா் கோட்டை பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தாா். பொதுமக்களும் போலீஸாருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனா்.

மேலும், புத்தாண்டையொட்டி, காவலா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், 2022-ஆம் ஆண்டில் குற்றச் சம்பவங்களைக் குறைக்கும் வகையில், போலீஸாா் சிறப்பாக செயல்பட வேண்டும் எனக் கூறி வாழ்த்துத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

உதவி காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட்ஜான், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் உடன் இருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT