குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் ஊராட்சியில் பட்டா பிழை திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அக்ராவரம், ரங்கசமுத்திரம் உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட கிராமங்களை ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட இந்த முகாமுக்கு கோட்டாட்சியா் சா.தனஞ்செயன் தலைமை வகித்தாா்.
வட்டாட்சியா் ச.லலிதா வரவேற்றாா். எம்எல்ஏ அமலுவிஜயன் பிழை திருத்தம் செய்யப்பட்ட பட்டா ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினாா்.
ஒன்றியக்குழு உறுப்பினா் எஸ்.மனோகரன், ஊராட்சி மன்றத் தலைவா் எம்.முனிசாமி, துணை வட்டாட்சியா் வேல்முருகன், வருவாய் ஆய்வாளா் காா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ADVERTISEMENT