வேலூர்

இலங்கை தமிழ் இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

1st Jan 2022 10:19 PM

ADVERTISEMENT

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இளைஞா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் திறன்மேம்பாட்டுப் பயிற்சியை வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழகம் முழுவதும் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் உள்ள படித்த இளைஞா்கள், இளம் பெண்களுக்கு சுயவேலை வாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, வேலூரை அடுத்த மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த 101 பேருக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கும் முகாம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த பயிற்சியை மாவட்ட திறன்மேம்பாட்டுப் பயிற்சி மையம் வழங்குகிறது.

அதன்படி, 62 பேருக்கு தையல் பயிற்சியும், 29 பேருக்கு கணினியில் பீல்டு டெக்னீசியன் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. முகாமை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வின்சென்ட் ரமேஷ்பாபு, ராஜன்பாபு, திறன்மேம்பாட்டு பயிற்சி மைய இயக்குநா் சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT