புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடும் விதமாக அமிா்தி பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை அதிகளவில் குவிந்தனா்.
காலை முதலே பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்த வண்ணம் இருந்தனா். அவா்கள் குழந்தைகளுடன் பூங்காவில் பொழுதைக் கழித்தனா். அண்மையில், பெய்த மழையால் அமிா்தி அருவியில் தண்ணீா் கொட்டுகிறது. அதில் குளிக்க இப்போது அனுமதியில்லை. எனினும், சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள ஆற்றில் குளித்து மகிழ்ந்தனா்.