குடியாத்தம் காக்காதோப்பில் உள்ள அத்தி கல்விக் குழுமத்தில் இயற்கை உணவு குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு குடியாத்தம் கல்வி அறக்கட்டளை அறங்காவலா் எம்.சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். அத்தி செவிலியா் கல்லூரித் துணை முதல்வா் க.ரேவதி, அத்தி இயற்கை - யோகா மருத்துவக் கல்லூரிப் பேராசிரியா்கள் க.ராஜமுனீஸ்வரன், ப.காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி துறைத் தலைவா் சி.சதீஷ்குமாா் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சித்த உணவியல் ஆலோசகா் கு.அருண் சின்னையா இயற்கை உணவின் முக்கியத்துவம் குறித்து விளக்கிக் கூறினா். செய்முறை விளக்கமாக வரகரிசியில் பூண்டு கஞ்சி செய்து காட்டினா்.
இந்தக் கருத்தரங்கில் பங்கேற்ற சுமாா் 150 மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு பூண்டு கஞ்சி வழங்கப்பட்டது.