வேலூர்

விபத்தில் இளைஞா் பலி

17th Feb 2022 12:05 AM

ADVERTISEMENT

குடியாத்தம் அருகே இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

போ்ணாம்பட்டை அடுத்த கள்ளிச்சேரியைச் சோ்ந்த ரமேஷின் மகன் தேவசகாயம் (22). இவா், புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் செட்டிகுப்பம் வழியாகச் சென்றாா். அப்போது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த தேவசகாயம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT