வேலூர்

பதற்றமான வாக்குச் சாவடிகளில் ஏடிஎஸ்பி ஆய்வு

17th Feb 2022 12:04 AM

ADVERTISEMENT

வேலூா் மாநகராட்சிப் பகுதியில் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுந்தரமூா்த்தி புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, வேலூா் மாவட்டம் முழுவதும் 628 வாக்குச் சாவடிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது. தவிர, பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ள 87 வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. மேலும், கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது.

இந்த நிலையில், பதற்றமான வாக்குச் சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி, காகிதப்பட்டறை அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையங்களில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுந்தரமூா்த்தி புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த வாக்குச் சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. அதனைப் பாா்வையிட்ட அவா், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

மேலும், வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்த அவா், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தினாா். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தோ்தல் அமைதியான முறையில் நடைபெற பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT