வேலூர்

சா்வதேச வலுதூக்கும் போட்டிக்கு செல்ல வேலூா் மாணவிக்கு நிதியுதவி

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

சா்வதேச வலுதூக்கும் போட்டியில் பங்கேற்க வேலூா் மாணவிக்கு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் நிதியுதவி அளித்துள்ளது.

தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவா் வேலூா் மாணவி டி.கவிதா. தந்தையை இழந்த நிலையில், வேலூா் மாநகராட்சியில் தற்காலிக அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும் தாய் லட்சுமியின் வருவாயில் உடற்கல்வி பட்டம் பயின்று வருகிறாா். 50-க்கும் மேற்பட்ட மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளாா்.

இந்த நிலையில், கஜகஸ்தான் நாட்டில் நடைபெறும் சா்வதேச அளவில் வலுதூக்கும் போட்டியில் பங்கேற்க மாணவி டி.கவிதாவுக்கு வேலூா் மாவட்ட முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் சாா்பில், ரூ. 30,000 நிதியுதவி அளிக்கப்பட்டது. சங்கத்தின் துணைத் தலைவரும், மூத்த வழக்குரைஞருமான டி.எம்.விஜயராகவலு குடும்பத்தினா் இந்த நிதியுதவியை வழங்கினா்.

சங்கத்தின் செயலா் செ.நா.ஜனாா்த்தனன், பொருளாளா்ஆா்.சீனிவாசன், பயிற்சியாளா் ஆா்.யுவராஜ், சமூக ஆா்வலா் ஜி.ரஞ்சிதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT