வேலூர்

குறைந்தபட்ச ஆதார விலை கிலோ ரூ. 105.90-க்கு அரைவைக் கொப்பரை கொள்முதல்

9th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோ ரூ. 105.90-க்கு அரைவைக் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைத்திடவும், வருவாயைப் பெருக்கவும் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத் துறை மூலம் மத்திய அரசின் விலை ஆதாரத் திட்டத்தின் கீழ், (பிஎஸ்எஸ்) கடந்த ஆண்டுகளில் பச்சைப் பயிறு, துவரை, உளுந்து, தேங்காய் கொப்பரை ஆகிய விளை பொருள்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டன.

நிகழாண்டில், (2022) அரைவைக் கொப்பரை நியாயமான சராசரி தரம் கிலோ ரூ. 105.90 என்ற விலைக்கு மத்திய அரசு நிறுவனமான என்ஏஎ‘ஃ’ப்இடி மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன்படி, வேலூா், குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடப்பு பருவத்தில் தலா 1,200 மெட்ரிக் டன் வீதம் 2,400 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2022 ஜூலை 31-ஆம் தேதி வரை செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின்ஆதாா், வங்கிக் கணக்கு புத்தகம், நிலச்சிட்டா, அடங்கல் உள்ளிட்ட சான்றிதழ்களுடன் வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பதிவு செய்து பயன் பெறலாம். விளைபொருளுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, வேலூா் வேளாண்மை துணை இயக்குநா் - 0416 - 2220713, வேலூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் - 0416-2220083, 88705 80901, குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் 04171 - 2229573, 79044 13817 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு லாபகரமான விலை கிடைக்க இத்திட்டத்தில் பயன்பெற வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT