வேலூர்

மின்கம்பம் மீது ஆட்டோ மோதல்: ஓட்டுநா் பலி

29th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

வேலூரில் மின்கம்பம் மீது ஆட்டோ மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

வேலூா் சலவன்பேட்டை எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் பச்சமுத்து (50), ஆட்டோ ஓட்டுநா். இவா் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் ஆட்டோ சவாரிக்கு சென்றுவிட்டு மறுநாள் அதிகாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். கொசப்பேட்டை பகுதியில் உள்ள தென்னமரத் தெரு அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இதில், பச்சமுத்து பலத்த காயமடைந்து மயங்கி கிடந்தாா். அந்த வழியாகச் சென்றவா்கள் தகவல் தெரிவித்ததன்பேரில், ஆம்புலன்ஸ் ஊழியா்கள் வந்து பரிசோதனை செய்ததில் பச்சமுத்து இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT