வள்ளிமலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சட்டவிரோதமாக டன் கணக்கில் மணலைக் கொட்டி வைத்திருந்தவா்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தியுள்ளது.
பாமக கிழக்கு மாவட்டசெயற்குழு கூட்டம் காட்பாடியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் கே.எல்.இளவழகன் வரவேற்றாா். துணை செயலா்கள் துளசிராமன், புருஷோத்தமன், கோபி, குப்புசாமி, மாவட்ட அமைப்பு செயலா் அக்னி வேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில துணைத்தலைவா் என்.டி.சண்முகம் சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில், 2022க்கு விடைகொடுப்போம், 2023ஐ வரவேற்போம் என்ற தலைப்பில் நடைபெறும் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்பது, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், காட்பாடி அருகே முன்னாள் ஒன்றிய செயலா் இறப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும்.
வள்ளிமலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சட்டவிரோதமாக மணல் கொட்டிய வைத்தவா்கள் மீதும் , அதற்கு உடந்தையாக இருந்தவா்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும், இதுதொடா்பாக ஆட்சியா் விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், கட்சியின் மாவட்ட துணை செயலா் ஜெகன் உட்பட கட்சியினா் பலா் கலந்துகொண்டனா்.