குடியாத்தம் செதுக்கரையில் இயங்கி வரும் வட்ட வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வரும் 30- ஆம் தேதி முதல் பருத்தி ஏலம் தொடங்குகிறது.
குடியாத்தம், போ்ணாம்பட்டு, கே.வி.குப்பம், காட்பாடி, வாலாஜா, சோளிங்கா் வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை இந்தச் சங்கத்தில் எடையிட்டு, ஏலம் மூலம் விற்பனை செய்து வருகின்றனா்.
மாநிலம் முழுவதிலுமிருந்து பருத்தி வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொள்வா். பருத்தி ஏலம் முடிந்தவுடன் அதற்கான பணத்தை விவசாயிகள் உடனடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இந்தச் சங்கத்தில் பருத்தி ஏல விற்பனை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை சங்கத் தலைவா் ஜே.கே.என்.பழனி, வேளாண் இயக்குநா் ஜே.ரமேஷ்குமாா், பொது மேலாளா் கே.முத்துராமன் ஆகியோா் செய்து வருகின்றனா்.