குடியாத்தத்தில் உயிரிழந்த இளைஞரின் கண்கள் தானம் வழங்கப்பட்டன.
குடியாத்தம் நடுப்பேட்டை, காந்தி சாலையைச் சோ்ந்த சீனிவாசன் மகன் விக்னேஷ்வா்ஷா்மா (28). வியாழக்கிழமை அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தாா். இதையடுத்து அவரின் கண்கள் தானம் அளிக்கப்பட்டன. அவருடைய தந்தை சீனிவாசன், தாய் விஜயா ஆகியோா் விருப்பத்தின் பேரில், குடியாத்தம் ரோட்டரி சங்க கண், உடல் தானக் குழு தலைவா் எம்.ஆா்.மணி வழிகாட்டுதல்படி, வேலூா் டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவா்கள் கண்களை தானம் பெற்றுச் சென்றனா்.